வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Caston
Last Updated : புதன், 30 டிசம்பர் 2015 (11:58 IST)

சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு

2015 ஜனவரி 21 அன்று, இலங்கை அரசியலமைப்பின் 34 -வது சரத்தின்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.


 
 
ராஜபக்‌ஷே ஆட்சியில் ராணுவ தளபதியாக பதவி வகித்த சரத் பொன்சேகா 2009-ல் பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில், அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.
 
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா, இலங்கை அரசினால் இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பொன்சேகா குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்.
 
 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இராணுவ ரீதியாக அவருக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து சின்னங்கள், பதவிகள் மற்றும் பதக்கங்கள் யாவும் பறிக்கப்பட்டதுடன், அவருடைய வாக்குரிமையும் பறிக்கப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியமும் இடைநிறுத்தப்பட்டது.
 
மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றபின், சரத் பொன்சேகா மீண்டும் இலங்கை இராணுவத்தின் தலைமைப் படைத்தலைவராக பெறுப்பேற்றுக் கொண்டார்.
 
பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதால் சரத் பொன்சேகா இழந்திருந்த அனைத்தையும் எத்தகைய சட்டரீதியான தடைகளுமின்றி பெற்றுக்கொள்ள இதன் மூலம் வழிவகுக்கப்பட்டது.