வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. கட்டுரைகள்
Written By Sasikala

பெண்களுக்கு சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பிரச்சனைகள்!

* தாயிடமிருந்து உணவு மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லக்கூடியது நஞ்சு கொடி, தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப்  பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக் கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரிந்து வந்துவிட வேண்டும். 



ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.
 
* சிசேரியன் பிரசவம் செய்வதால், தாயின் கர்ப்பப்பையும், நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்றோடு ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால்   தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.
 
* சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்றுவலி, தலைவலி, முதுகுவலி, அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.
 
* சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறைமாத குழந்தகளுக்கு பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது தொற்றுநோய்கள் என பிறந்த மூன்று நாட்களில் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.