1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : சனி, 13 மே 2017 (09:18 IST)

சசிகலாவை நீக்குவது எப்படி? அதை ஓ.பி.எஸ்-தான் கூற வேண்டும் : தம்பிதுரை கல கல

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க என்ன வழி இருக்கிறது என்பது ஓ.பி.எஸ் தான் கூற வேண்டும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் அணி களம் இறங்கிய பின், அதிமுகவில் இரு அணிகள் ஏற்பட்டது. இதில், சசிகலாவும், தினகரனும் தற்போது சிறையில் இருக்கிறார்கள்.  
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணையும் சூழல் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி, ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரணை, சசிகலா குடும்பத்தினைரை கட்சியிலிருந்து நீக்குதல் என ஓ.பி.எஸ் அணி கறார் காட்ட, இதுவெல்லாம் முடியாது என எடப்பாடி அணி கை விரித்து விட்டது. எனவே, இரு அணியும் இணைவது சாத்தியமில்லாத சூழலாகவே பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை “பொதுக்குழு கூடி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சசிகலா. எனவே, தனிப்பட்ட முறையில் யாரும் அவரை நீக்க முடியாது. இதுபற்றி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும். சசிகலாவை நீக்க என்ன வழி இருக்கிறது என்பது ஓ.பி.எஸ் கூறட்டும்” எனக் கூறினார்.