வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2017 (16:21 IST)

போயஸ் கார்டனில் கேக் வெட்டி கொண்டாடினாரா சசிகலா?

அதிமுக அமைச்சர்களுடன், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா போயஸ் கார்டனில் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது கேக் வெட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 

 
அதிமுக பொருளாலராக உள்ள சசிகலா, தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும் என அமைச்சர் தம்பிதுரை முதல் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிமுகவின் அனைத்து அமைச்சர்களுக்கும் போயஸ் கார்டன் வரும்படி அழைப்பு விடப்பட்டது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல் அனைவரும் ஆஜராகினார்கள்.
 
அப்போது, கார்டனில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சசிகலா திறந்து வைத்துள்ளார். அதன்பின் அவர் அமைச்சர்களிடம் முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும், புத்தாண்டையொட்டி, ஜெயலலிதா மற்றும் சசிகலா உருவப்படம் பொதிந்த கேக்கை சசிகலா வெட்டினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஜெயலலிதா மறைந்து ஒரு மாதம் முடிவடையாத நிலையில் கார்டனில் கேக் வெட்டப்பட்ட விவகாரம் அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும், அதிமுக அமைச்சர்கள் அனைவரிடமும் கையெழுத்து வாங்கியுள்ளனராம். சசிகலா முதல்வராகத்தான் இந்த கையெழுத்து பெறப்பட்டிக்கும் என சில அமைச்சர்கள் கருதியதால் அனைவருக்கும் அது கிலியை ஏற்படுத்தியுள்ளதாம்.