1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 2 மார்ச் 2017 (21:55 IST)

பெப்சி-கோக் தடை எதிரொலி. மோடி-அருண்ஜெட்லியை அவசரமாக சந்தித்த இந்திராநூயி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக நேற்று முதல் தமிழகம் முழுவதும் பெப்சி கோக் போன்ற வெளிநாட்டு பானங்கள் விற்க போவதில்லை என வணிகர்கள் தீர்க்கமான முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் வருகின்றனர்.




இந்நிலையில் இதனால் தமிழகத்தில் பெப்சி கோக் பானங்களின் விற்பனை 80% சரிந்துவிட்டதாகவும், விரைவில் 100% சரிய வாய்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ஆலோசனை செய்ய இன்று பெப்சி நிறுவன தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர்களை சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் காலையில் இந்திராநூயி பிரதமரை பார்த்து பேசியதற்கும், மதியத்தில் தாமிரபரணியில் தண்ணிர் எடுக்க பெப்சி கம்பெணிக்கு விதித்த இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என பலர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.