அடம்பிடித்த விஜயகாந்த்: ஆப்பு வைத்த நிர்வாகி
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி பிரமுகர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகமெங்கும் உள்ள முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட மயிலாடுதுறையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அருட்செல்வன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் சில கருத்துக்களை விஜயகாந்திடம் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் தனை விஜயகாந்த் ஏற்கவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.