செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (01:22 IST)

தினகரன் மீது புதிய வழக்கு: இரவோடு இரவாக கைதா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வரும் டிடிவி தினகரன் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இன்று இரவு கைது செய்யபட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது



 
 
சேலத்தில் தினகரன் தரப்பினர் துண்டுச்சீட்டு வழங்கியதாகவும், அதில் பாரத பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பழனிச்சாமி குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் இருப்பதாகவும், எனவே இந்திய இறையாண்மைக்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகித்த வழக்கு ஒன்று சேலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் இந்த  வழக்கில் தினகரன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது
 
இந்த வழக்கின் அடிப்படையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.