ஜெயலலிதா சமாதி முன் இணைந்த தீபா-மாதவன்: கட்சிகளும் இணையுமா?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் சசிகலா அதற்கு இடம் கொடுக்காமல் போகவே தொண்டர்கள் ஆதரவுடன் புதிய கட்சியை தொடங்கினார்
முதலில் இந்த கட்சியை அவரும் அவருடைய கணவர் மாதவனும் இணைந்து நடத்தி வந்த நிலையில் திடீரென மனைவி தீபாவை பிரிந்த மாதவன், தனிக்கட்சியை ஆரம்பித்து செயல்பட்டார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தீபா-மாதவன் தங்கள் கருத்துவேறுபாடுகளை மறந்து நேற்று ஜெயலலிதா சமாதி முன் இணைந்தனர். அதேபோல் இரண்டு கட்சிகளும் இணையும் என்றும் எந்த கட்சியில் செயல்படுவது என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்,.