வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 24 ஜூன் 2017 (17:39 IST)

அதிமுக அஞ்சுகிறது என இதன்மூலம் தெளிவாக தெரிகிறது; மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் மீதான அச்சத்தில் அதிமுக, தனி அதிகாரிகளின் பதவிகாலத்தை மேலும் நீட்டித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

 
சட்டசபையில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை 2017 டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான மசோதாவை  தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கம் போல் திமுக வெளிநடப்பு செய்தது.
 
இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
 
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று கொண்டிருப்பதாக தேர்தல் ஆணையமும், அரசும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் இன்று மீண்டும் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீடிக்கும் மசோதாவை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார். 
 
அதிமுகவிடம் சின்னம் இல்லை. கட்சியும் இரண்டு, மூன்றாக உடைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அஞ்சுகிறது என்பது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது என்றார்.