முன்பு குத்து ரம்யா. குத்து அடைமொழி பிடிக்காததால் இப்போது திவ்யா ஸ்பந்தனா. இது ரம்யாவின் ஒரிஜினல் பெயர். பொல்லாதவன், வாரணம் ஆயிரம் என திவ்யாவின் செகண்ட் இன்னிங்ஸ் சினிமா கிராஃப் செம ஷார்ப். இவரைப் பற்றிய சமீபத்திய ஹாட் செய்தி, விஜயுடன் ஆட மறுத்தது. எந்த கேள்விக்கும் தயங்காமல் பதிலளிக்கும் திவ்யாவின் பேட்டியிலிருந்து... நீங்கள் நடித்ததில் பல தோல்விப் படங்கள். இது எப்படி நேர்ந்தது? சினிமாவுக்குள் நுழைந்த காலத்தில் நட்புக்காகவும், மரியாதை நிமித்தமாகவும் நடிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அதன் விளைவாக சில மோசமான தோல்விகள் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் இந்த கேள்வியை கேட்பவர்கள் 2008ல் வெளிவந்த என்னுடைய வெற்றி பெற்ற படங்கள் பற்றி எதுவும் பேசுவதில்லை. வாரணம் ஆயிரம் படத்தில் நீங்கள் நடித்த பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா? வாரணம் ஆயிரத்துக்காக இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்தேன். அதில் பல காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது வருத்தம்தான் என்றாலும் அந்த படத்தில் நடித்ததால் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. |