கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு  சினிமா  ஹாலிவுட்
20 ஜனவரி 2009ஹாலிவுட்

ஹாலிவுட் நடிகை ஒருவர் பாருக்கு செல்வதோ, தளும்ப தளும்ப தண்ணி அடிப்பதோ காபி குடிப்பதைவிட சாதாரண விஷயம். ஆனால், ஹாலிவுட் ஹோட்டல் ஒன்றின் பா‌ரில் பா‌ரிஸ் ஹில்டனை பார்த்தவர்கள் அதுபற்றி பக்கம் பக்கமாக கதைக்கிறார்கள். காரணம்? தனது காதலனை கழற்றிவிட்ட ஹில்டன் தற்போது தனியாக‌த்தான் இருக்கிறார். இவரைப் போலவே காதலியை பி‌ரிந்து புதிய காதலிக்கு காத்திருக்கிறார், ஜா‌ர்‌ஜ் குளூனி. பா‌ரில் ஹில்டனுடன் மது அருந்தியவர் இந்த குளூனி என்பதால்தான் இத்தனை பரபரப்பு. இருவரும் அன்னியோன்யமாக சி‌ரித்துப் பேசிக் கொண்டிருந்ததாகவும், அடுத்தவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்றும் பா‌ரில் இந்த ஜோடியை பார்த்தவர்கள் தெ‌ரிவித்துள்ளனர். ஹில்டன், குளூனி காதலிக்கிறார்கள் என்பது றாலிவுட் ஹாட் டாபிக். எத்தனை நாளைக்கு என்பதுதான் தெ‌ரியவில்லை.