மீண்டும் இந்திப் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா.
இந்தியாவின் எந்தவொரு இசையமைப்பாளருடனும் சமமாக குறிப்பிடத்தகுந்த திறமைசாலி இசைஞானி இளையராஜா. இந்திப் படவுலகின் பிரபலங்களும், இசை ஜாம்பவான்களும் இவரது இசையின் ரசிகர்கள். மேல்மட்டத்தை ஊடுருவிய அளவுக்கு ரசிகர்களை சென்று சேரவில்லை இளையராஜாவின் இசை என்பது இந்தி ரசிகர்களுக்கு பேரிழிப்பு.
இளையராஜா கடைசியாக இசையமைத்த இந்திப் படம் சீனிகம். அமிதாப், தபு நடித்த இந்தப் படத்தில் இளையராஜாவின் பழைய தமிழ்ப் படங்களின் பாடல் மெட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
சீனிகம் படத்தின் இயக்குனர் பால்கி, இளையராஜாவின் ரசிகர் என்பதால் தான் ரசித்த ராஜாவின் பாடல்களை சீனிகம் படத்தில் பயன்படுத்தினார்.