ராமாயணத்தை இந்த காலகட்டத்துக்கு ஏற்ப நவீனமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இந்தியில் படத்தின் பெயர்கூட ராவணாதான்.
தமிழ்ப் பெயர் இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக அசோகவனமாக இருக்கலாம் என்கின்றன செய்திகள். இதில் ஐஸ்வர்யா ராய்க்கு ராமாயண சீதையை பிரதிபலிக்கும் கதாபாத்திரம். படத்தில் இவரது பெயர் சீதை என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இதனை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். படத்தில் ராமாயண சீதையை போன்ற கதாபாத்திரம்தான் என்றாலும் என்னுடைய கேரக்டர் பெயர் சீதை அல்ல என தெளிவுப்படுத்தியிருக்கிறார். அப்படியயன்றால் என்ன பெயர்?
படம் வெளிவரும் வரை அதுபற்றி பிரஸ்சுக்கு பேட்டியளிப்பதில்லை என்று மணிரத்னத்திடம் வாக்கு கொடுத்திருக்கிறாராம் ஐஸ். அதனால் படம் குறித்து எதுவும் பேசப்போவதில்லை என்று தீர்மானித்துள்ளார்.
அதே நேரம் மணிரத்னத்தின் மேக்கிங் குறித்து கண்டபடி உணர்ச்சிவசப்படுகிறார். ஹி இஸ் எ ஜீனியஸ் என்பது ஐஸின் அபிப்ராயம். உலக அழகி சொன்னால் உண்மையாகதான் இருக்கும்.