FREE

On the App Store

FREE

On the App Store

எந்திரன்

செவ்வாய், 5 அக்டோபர் 2010 (13:19 IST)

Widgets Magazine

மனித எந்திரன் (இதுவும் ர‌ஜினியே) செய்யும் சாதனைகளும், அசட்டுத்தனங்களும் படத்தின் முன்பகுதியில் பிரதானமாக வருகிறது. டிவியை போடு என்று சொன்னால் டிவியை ஆன் செய்யாமல் கீழே போடுகிறது. தீயில் சிக்கியவர்களை காப்பாற்று என்ற சொன்னால் இளம் பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது நிர்வாணமாக காப்பாற்றி எல்லோருக்கும் முன்பாக கொண்டு வந்து நிறுத்துகிறது. எந்திரத்துக்கு மனித உணர்வுகள் இல்லை என்பதை காட்டும் இந்தக் காட்சிகள் படத்தில் அத்தனை உறுத்தாமல் பொருந்திப் போவதை பாராட்டியே ஆக வேண்டும்.

WD
வசீகரன் எந்திரனுக்கு மனித உணர்வுகளை ஒரு கணிதம் போல் எழுதி காண்பிக்கும் காட்சிக்கு இரண்டு முகங்கள் உள்ளது. நகைச்சுவை உணர்வு உள்ளவர் அதனை அந்த கோணத்தில் எடுத்துக் கொள்ளலாம், சீ‌ரியஸான ஒரு மனிதர் அதனை சீ‌ரியஸாக எடுத்துக் கொள்ளலாம். ஆக, இப்போது எந்திரனுக்கு மனித உணர்வுகள் வந்துவிட்டது. அது வசீகரனின் காதலியை காதலிக்க‌துவங்கிவிட்டது. கல்யாணத்தன்று அது காதலியை கடத்தியும்விட்டது. இனி கிளைமாக்ஸ்.

படத்தின் முக்கால்வாசி பட்ஜெட் இந்த கிளைமாக்ஸுக்கு செலவிடப்பட்டிருக்கும் என்பதை படத்தின் பின்னணி இசையை கேட்கும் ஒரு குருடன்கூட உணர்ந்து கொள்வான். எந்திரனின் கொட்டத்தை அடக்க வசீகரன் பல விஷயங்கள் சொல்கிறார். மியூட் செய்யப்பட்ட இந்தக் காட்சியை பார்க்கும் போது ஒருவர் பெ‌ரிதாக எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால் வசீகரன் சிட்டியின் மின்சார சப்ளையை கட் செய்ய‌சொல்வதும், எந்திரனைப் போலவே இருக்கும் நூற்றுக் கணக்கான எந்திரன்கள் கார் பேட்ட‌ரியிலிருந்து ‌‌ரீசார்‌‌செய்துக் கொள்வதும் குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும் சமாச்சாரங்கள். இறுதியில் எந்திரன்கள் பந்தாகவும், பாம்பாகவும், ராட்சஸ மனிதனாகவும் மாறி அட்டகாசம் செய்யும் காட்சிகள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட பல படங்களின் சாயல்.

ர‌ஜினி என்ற மாஸ் பிம்பம் இல்லாமலிருந்தால் எந்திரனை பற்றி நினைப்பதே ஒரு தயா‌ரிப்பாளருக்கு வாழ்நாள் துர்சொப்பனமாக இருந்திருக்கும். இதிலிருந்தே படத்தின் திரைக்கதை தரத்தை ஒருவர் தெ‌ரிந்து கொள்ளலாம். ரஹ்மானின் இசையும், பின்னணி இசையும் பாஸ் மார்க்கை‌தாண்டவில்லை. இதனை பு‌ரிந்து கொள்ள முடியாதவர்களும், பு‌ரிந்து கொள்ள மறுப்பவர்களும் அவ‌ரின் ஸ்லம்டாக் மில்லியன‌ரின் பின்னணி இசையை மீண்டும் ஒருமுறை கேட்கவும் (கவனிக்க, பாடல்களை அல்ல, பின்னணி இசையை).

மிகப் பெ‌ரிய சாதனை செய்யும் விஞ்ஞானியின் இரு அசட்டு அசிஸ்டெண்டுகள் (சந்தானம், கருணாஸ்), நம்ம கூட்டத்துல ஒரு கறுப்பு ஆடு என்று எந்திரன் கர்‌ஜிப்பது (அப்படியே அசோகன் பட எஃபெக்ட்), வசீகரனின் குருவுக்கு சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்பு.... திரைக்கதையின் அத்தனை நூலிழையும் நொந்து நூலானவை.

ர‌ஜினியின் மாஸை மட்டும் தவிர்த்தால் எந்திரன் - வெறும் ஆட்டுக்கல்.

இப்போது iTunes இல் வெப்துனியா தமிழ் மொபைல் செயலியைப் பதிவிறக்க கிளிக் செய்யவும். ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பதிவிறக்க கிளிக் செய்யவும். கட்டுரைகளைப் படித்து, எங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்திடுங்கள், ட்விட்டரில் எங்களைப் பின்பற்றுங்கள்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

சினிமா

த்ரிஷாவின் சமூக பொறுப்பு

த்ரிஷா ரசிகர் மன்றம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள த்ரிஷா ஃபேன் கிளப் டாட் இன் என்னும் ...

கவர்ச்சி மழையில் லட்சுமிராய்

"நெஞ்சைத் தொடு" படத்தில் லட்சுமிராய் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்

கவர்ச்சிக்கு நோ சொல்லும் காம்னா

ப்ரியாமணியும் இவரும் சேர்ந்து "டாஸ்" என்னும் தெலுங்கு படத்தில் இப்போது நடித்துக் ...

ஜேம்ஸ்பாண்ட் நடிகரின் அபாரத் துணிச்சல்!

போல்டன் காம்ப்ஸ் எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் வாயிலாக புதிய ஜேம்ஸ்பாண்டாக ...

Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine

நாடும் நடப்பும்

இந்தியாவுக்கு அருகில் யாரும் அறியாத ரகசியத் தீவு - படங்கள் & வீடியோ இணைப்பு

உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் ...

வியாபம் ஊழலில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் - பாஜக அமைச்சர்கள்: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

வியாபம் ஊழலில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற்றும் பாஜக அமைச்சர்கள் சிக்குகின்றனர். ஊழல் பணம் பங்கு ...

பு‌திய செ‌ய்‌திக‌ள்

ஆர்யா, கிருஷ்ணா நாடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள “யட்சன்” திரைப்ப்ட இசை வெளியீட்டு விழா - படங்கள்!

ஆர்யா, கிருஷ்ணா நாடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள “யட்சன்” திரைப்ப்ட இசை வெளியீட்டு விழா - ...

பொருத்தமானவர் கிடைத்ததும் திருமணம் - கல்யாண மூடில் ஸ்ரேயா

த்ரிஷாவுக்கும், ஸ்ரேயாவுக்கும் திரைத்துறையில் கிட்டத்தட்ட ஒரே சீனியாரிட்டி. 14 வருடங்களாக

Widgets Magazine

மு‌க்‌கிய செ‌ய்‌திக‌ள்

மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறை டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் இருப்பது வெட்கக்கேடான விஷயம் : விஜயகாந்த்

தமிழக மக்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டிய காவல்துறை, கேவலமாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் இருப்பது ...

செயலிழந்த அரசு தனது தோல்வியை மறைப்பதற்காக தரந்தாழ்ந்த வகையில் பேசுகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மக்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாத, செயலிழந்த அரசு தனது தோல்வியை மறைப்பதற்காக தரந்தாழ்ந்த வகையில் ...

சுஷ்மா ஸ்வராஜை கிரிமினல் என்ற ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் - நிதின் கட்காரி

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கிரிமினல் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க ...

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்; அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி விவகாரத்தை இன்று மதியம் அவசர வழக்காக ...

Widgets Magazine
Widgets Magazine