காதலை ப‌ரிமா‌றி‌‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்! எ‌ரி‌ச்சலை அ‌ல்ல...

Webdunia| Last Modified திங்கள், 6 செப்டம்பர் 2010 (14:37 IST)
த‌ற்போ‌திரு‌க்கு‌ம் த‌ம்ப‌திய‌ர் பலரு‌ம் த‌ங்களு‌க்கு‌ள் காதலை‌ப் ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்‌கிறா‌ர்களோ இ‌ல்லையோ... எ‌ரி‌ச்சலை‌த் தவறாம‌ல் ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள்.

கணவரு‌க்காக மனை‌வியோ, மன‌ைவி‌க்காக கணவரோ ‌சி‌ரி‌க்க முடியாது.. ஆனா‌ல், கணவரை அ‌ல்லது மனை‌வியை ‌சி‌ரி‌க்க வை‌க்க முடியு‌ம். ஆனா‌ல் அதை ‌விட, அ‌திகமாக எ‌ரி‌ச்ச‌ல் பட வை‌‌‌க்கவே செ‌ய்‌கிறோ‌ம். இதை த‌வி‌ர்‌‌க்க கோப‌த்தை அட‌க்‌கி, அ‌ந்த சூ‌ழ்‌நிலையை ‌‌சீரா‌க்க முய‌ற்‌சி‌க்க வே‌ண்டு‌ம்.

பொதுவாக வேலையை இருவரு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வது, அலுவலக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் ‌பிர‌ச்‌சினைகளை ‌வீ‌ட்டி‌ன் வா‌யி‌லிலேயே ‌வி‌ட்டு ‌வி‌ட்டு வருவது குடு‌ம்ப‌த்‌தி‌ன் அமை‌‌தி‌க்கு ந‌ல்லது.
சொ‌ல்ல ‌வே‌ண்டிய ‌விஷய‌ங்களை கணவ‌ரிடமு‌ம், மனை‌வி‌யிடமு‌ம் ‌நி‌ச்சயமாக மற‌க்காம‌ல் சொ‌ல்‌லி ‌விடுவது பல ‌பிர‌ச்‌சினைக‌ள் உருவாகாம‌ல் இரு‌க்க வா‌ய்‌ப்பாக அமையு‌ம்.

மனை‌வி ‌சி‌ரி‌த்த முகமாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கணவ‌‌ன் ஆசை‌‌ப்படலா‌ம். ஆனா‌ல், மனை‌வி ‌சி‌ரி‌த்த முகமாக இரு‌க்க வே‌ண்‌டு‌ம் எ‌ன்றா‌ல் அத‌ற்கான முய‌ற்‌சியை கணவ‌ன்தா‌ன் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று கணவரு‌க்கு தெ‌ரிய வை‌க்க வே‌ண்டிய அவ‌சிய‌ம் மனை‌வி‌க்கு உ‌ண்டு.
கணவரது ‌பிர‌ச்‌சினைகளை ‌தீ‌ர்‌த்து வை‌க்க முடியா‌வி‌ட்டாலு‌ம், ‌பிர‌ச்‌சினையை பெ‌ரிதா‌க்குவதோ, அதை‌ப் ப‌ற்‌றி தவறாக ‌சி‌த்த‌ரி‌ப்பதோ செ‌ய்யாம‌ல் இரு‌‌ந்தாலே போது‌ம்.

குடு‌ம்ப ‌விஷய‌ங்களை கணவரோ அ‌ல்லது மனை‌வியோ ‌பிற‌ரிட‌ம் கூறுவதை த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். மூ‌ன்றா‌ம் நப‌ரி‌ன் தலை‌யீடு எ‌ப்போதுமே குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ச‌ரிவராது.
கணவரு‌ம் மனை‌‌வியு‌ம் த‌ங்களு‌க்கு‌ள் ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்வது காதலு‌ம், அ‌ன்புமாக இரு‌க்க வ‌ே‌ண்டுமே‌த் த‌விர, எ‌ரி‌ச்சலு‌ம், கோபமுமாக இரு‌க்க‌க் கூடாது.


இதில் மேலும் படிக்கவும் :