ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (12:17 IST)

சீன அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங்: 3-வது முறையாக தேர்வு..!

Xijinping
சீனா அதிபார ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
சீன மக்கள் குடியரசின் தலைவராகவும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் இருக்கும் ஜி ஜின்பிங்ஒருமனதாக மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சீன மக்கள் குடியரசின் தலைவராக இருந்து வரும் ஜி ஜின்பிங் ஏற்கனவே இரண்டு முறை சீன அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
இதன் மூலம் அவர் 2028 ஆம் ஆண்டு மார்ச் வரை சீன அதிபராக பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மாவோவுக்கு பிறகு இரண்டு முறைக்கு மேல் ஒருவர் சீன அதிபராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran