1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (07:33 IST)

உலக அளவில் 73 லட்சம், அமெரிக்காவில் 20 லட்சம்: குறையாத கொரோனா ஆட்டம்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,16,944ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36,02,502ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,13,627ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
உலகிலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20,45,549ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,14,148ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
மேலும் பிரேசிலில் படுமோசமடையும் வகையில் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அந்நாட்டில் மட்டும் ஒரே நாளில்  1,185 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அந்நாட்டில் ஒரே நாளில் 31,197 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், கொரோனா ஒருநாள் பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் ரஷ்யாவில் 485,253 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 289,140 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 289,046 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 235,561 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரு நாட்டில் 203,736 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 186,516பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானில் 175,927 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது