ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (13:41 IST)

2 நாட்களில் ரூ.5 கோடிக்கு நிர்வாண படம் விற்ற மாடல்! அந்த பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

இரண்டே நாட்களில் ரூபாய் ஐந்து கோடிக்கு தன்னுடைய நிர்வாண படங்களை விற்பனை செய்த அமெரிக்க மாடல் அழகி ஒருவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது 
 
ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயால் கோடிக்கணக்கான மரங்களும் லட்சக்கணக்கான விலங்கினங்களும் உயிரிழந்துள்ள நிலையில் இந்த காட்டுத் தீயை அணைக்க ஆஸ்திரேலிய அரசு மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்து தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர். இதற்காக நாளொன்றுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து வருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து உலகெங்கிலும் உள்ள சமூக நல நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவுக்கு கோடிக்கணக்கில் நிதிகளை அனுப்பி வருகின்றன 
 
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த கைலன் வார்ட் என்ற மாடல் அழகி டுவிட்டர் மூலம் தனது நிர்வாண படங்களை விற்பனை செய்து அதன் மூலம் திரட்டிய ரூபாய் ஐந்து கோடியை ஆஸ்திரேலிய காட்டுத்தீ மீட்பு பணிக்காக அனுப்பி உள்ளார். நிர்வாண படங்களை அவர் விற்பனை செய்தது தவறாக இருந்தாலும் அந்த பணத்தை அவர் செலவழித்த விதம் குறித்து செய்தி அறிந்ததும் நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்