மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி மறைவுக்கு ஐ.நா. இரங்கல்!

stan swamy
மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி மறைவுக்கு ஐ.நா. இரங்கல்!
siva| Last Updated: செவ்வாய், 6 ஜூலை 2021 (17:48 IST)
பழங்குடியின மக்களின் போராளியும் மனித உரிமை ஆர்வலருமான பாதிரியார் ஸ்டேன் சாமி நேற்று காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் அவரது மறைவிற்கு அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்த அதிகாரிகளே காரணம் என்றும் குற்றம் சுமத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஸ்டேன் சாமி மறைவிற்கு ஐநா இரங்கல் தெரிவித்துள்ளது. மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சாமி அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ள ஐநா, அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தியதாக யாரையும் கைது செய்யக் கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது
ஏற்கனவே ஸ்டேன் சாமி மறைவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது இரங்கலும் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதில் மேலும் படிக்கவும் :