1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. U.S. Neutralizes Iranian Minelayers Amid Rising Tensions in Hormuz Strait

ஹார்முஸ் நீரிணை பகுதியில் கண்ணிவெடி வைக்க முயற்சித்த ஈரான்.. 16 கப்பல்களை அடித்து நொறுக்கிய அமெரிக்கா..!

அமெரிக்கா
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் 16 கண்ணிவெடி வைக்கும் கப்பல்களை அமெரிக்க இராணுவம் அதிரடியாக அழித்துள்ளது.
 
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த நீரிணையில், ஈரான் கண்ணிவெடிகளை வைக்க முயற்சிப்பதாக எழுந்த புகார்களை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
ஹார்முஸ் நீரிணையானது பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் ஒரே கடல்வழிப் பாதையாகும். இந்த முக்கிய நீரிணையை ஈரான் சீர்குலைக்க முயன்றால், அந்த நாடு இதுவரை கண்டிராத அளவிலான தாக்குதலை சந்திக்கும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. 
 
அந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க படை நடத்திய இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. போரினால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா இந்த துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
அமெரிக்கா பொய் சொல்லுது.. அப்படி ஒன்னு நடக்கவே இல்லை.. ஹார்முஸ் நீரிணை விவகாரம் குறித்து ஈரான்..!