ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 மே 2018 (16:44 IST)

சோமாலியா: புயலுக்கு 15 பேர் பலி

சோமாலியாவில் கடும் புயல் மழை காரணமாக இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர்.
 
சோமாலியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள விவசாய நிலங்கள், சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 
மழையுடன் சேர்ந்து பலத்த காற்றும் வீசுவதால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை விரைந்து முடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த புயல் மழை காரணமாக இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
 
இந்நிலையில், கடும் வெள்ளம் சேதத்திற்கு நிவாரண நிதியாக சுமார் 80 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என்று ஐநா சபை மற்றும் சோமாலியா உலகநாடுகளிடம் முறையிட்டுள்ளது.