1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (19:04 IST)

தேவாலயத்தில் பூமியின் முப்பரிமாண காட்சி ! மக்கள் ஆச்சர்யம்

இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரசித்திபெற்றது பீட்டர்பரப் தேவாலயம். இங்கு நம் வாழும் புவி மாதிரி வடிவமானது முப்பரிமாண முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இந்த புவி மாதிரி வடிவம் கிரேக்கக் கடவுளான கயாவின் பெயரில் விண்வெளியில் இருந்து பூமியை பார்த்தால் எப்படி இருக்கும் என்றபடி அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் புவி மாதிரி வடிவத்தின் விட்டம் 22 அடி, இது தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளதே புவி மாசுபடுத்தக்கூடாது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கத்தான் என்று தேவாலய தரப்பில் தெரிவித்துள்ளனர்.
 
தேவாலயத்தில் மேற்கூரையில் கட்டி விடப்பட்டுள்ள இந்த பூமி மாதிரி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.