திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (21:16 IST)

ரெயிலில் பயணித்த துபாய் இளவரசர்...வைரலாகும் புகைப்படம்

dubai prince
ஐக்கிய அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும். இவர் லண்டன் வீதிகளில் உலவும் புகைப்படம் மக்களைக் கவர்ந்துள்ளது.

ஐக்கிய அமீரகம் உலகிலுள்ள செல்வச் செழிப்புள்ள   நாடு. இங்குள்ள மக்கள் அதிகம் வருமானம் ஈட்டுபவர்களாக இருக்கும் நிலையில், இந்த நாட்டை ஆளும் மன்னர் குடும்பத்தைப் பற்றி சொல்ல வேண்டுமா?

அத்தனை செல்வச் செழிப்பில் திளைக்கும் ஐ.அ. நாடுகளின் இளவரசர்  ஷேஜ் ஹம்தன் தன் அரசக் குடும்ப பாரம்பரியத்தை  ஒதுக்கி சாதாரண மக்களைப் போல் நடந்து வருகிறார்.

இந்த நிலையில், தன் குடும்பத்தினருடன்  லண்டன் சென்றுள்ள ஷேக் ஹம்தன் அங்குள்ள வீதிகளில்  சுற்றியும்,  நம்மூர் மெட்ரோ ரெயில் போன்ற ரெயில்களில் பயணிக்கும்போது, எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தை ஆக்ரமித்து வைரலாகி வருகிறது.
இவரை இன்ஸ்டாவில் சுமார் 14 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Fazza (@faz3)