பெட்டிப் படுக்கையுடன் தமிழ்நாட்டிற்கு கிளம்புங்கள்: சிங்களர்கள்
இலங்கை யாழ்பாணத்தில் தமிழர்கள் நடத்திய பேரணியில், சிங்களர்களுக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது. அதற்கு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர், தமிழர்கள் பெட்டிப் படுக்கையுடன் தமிழ்நாட்டிற்கு செல்ல தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார்.
இலங்கை யாழ்பாணத்தில் தமிழர்கள் கடந்த சனிக்கிழமை பேரணி ஒன்று நடத்தினர். அந்த பேரணியில் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல், புதிதாக வளர்ந்துவரும் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளுக்கு எதிராக குரல் எழுப்பினர்.
மேலும் பேரணியில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று பேசினார்.
இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கல்பொட அந்தே ஞானசார தேரர் கூறியதாவது:-
சிங்கள மக்களுக்கு சண்டித்தனம் காட்டினால் தமிழர்கள் அனைவரும் பெட்டிப் படுக்கையுடன் தமிழ்நாட்டிற்கு செல்ல தயராக வேண்டும். சிங்களர்களின் பொறுமையின் விளிம்பை தட்டிப்பார்க்கும் பரிசோதனையை செய்ய வேண்டாம், என்று கூறினார்.