1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:24 IST)

என்ன விலை கொடுத்தேனும் போரை தடுப்பேன்: தென் கொரிய அதிபர் உறுதி!!

வடகொரியா மீது ஐநா புதிய பொருளாதார தடை ஒன்றை விதித்தது. இதற்கு அமெரிக்கா வழிவகுத்தது. இதனால் ரூ.6,500 கோடி வருவாய்  இழப்பு வடகொரியவிற்கு ஏற்பட்டுள்ளது.


 
 
இதனால் கோபமடைந்த வடகொரியா, அமெரிக்காவை மிரட்டியது. இதை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் மோகம் சூழ்ந்தது.
 
இந்நிலையில் தென்கொரியாவின் அதிபர், பதவி ஏற்று 100 நாட்கள் ஆனதையொட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
அதில் அவர் கூறியதாவது, நான் என்ன விலை கொடுத்தேனும் இந்த தீபகற்ப பகுதியில் போரைத் தடுப்பேன். கொரிய தீபகற்ப பகுதியில் போர் நடக்காது என்பதை தென் கொரியர்கள் உறுதியாக நம்பலாம்.
 
அமெரிக்கா அதிபர் டிரம்ப், தென்கொரியாவுடன் கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவுகளும் எடுக்கப்படாது என்று உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.