உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது? – விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் தகவல்!
கடந்த இரண்டு வருட காலமாக உலகை உலுக்கு வரும் கொரோனாவிலிருந்து உலக நாடுகள் மீள்வது குறித்து விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சித்து வருகின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் “இந்தியாவில் முன்பை விட தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. எனினும் அதிகம் தடுப்பூசி செலுத்தப்படாத பகுதிகளில் தொற்று அதிகரிக்கலாம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செலுத்தப்பட்டால் அடுத்த ஆண்டு இறுதியில் உலக நாடுகள் கொரோனாவிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார்.