எங்க ஊருக்கு டூர் வந்தா 100 அமெரிக்க டாலர் இலவசம்! – அமெரிக்க சுற்றுலா தளம் அதிரடி அறிவிப்பு!

Santa Maria
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (12:10 IST)
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் சுற்றுலாத்துறை பலத்த சரிவை சந்தித்துள்ள நிலையில் கலிபொர்னியா சுற்றுலா தளம் அறிவித்துள்ள சலுகை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா காரணமாக உலகம் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் சுற்றுலா துறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது விமான பயணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும் பல இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தே காணப்படுகிறது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க கலிபொர்னியாவின் சண்டா மரியா பள்ளத்தாக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண் கவரும் இயற்கை அழகு கொண்ட சண்டா மரியா பள்ளத்தாக்கை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு 100 டாலர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருவதை அதிகரிக்க முடியும் என சுற்றுலா நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :