தொடர்புடைய செய்திகள்
- புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்
- போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இல்லை.. ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த சசிதரூர்..!
- மனுசி படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் எவை?.. விளக்கமளிக்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!
- உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!
- நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!
பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் உள் பகுதியில் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தீவிர தாக்குதல் நடத்தியது என்பதும், இதில் 40 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ரஷ்ய வரலாற்றில் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், இதற்கு பதிலடியாக ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் 400 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசியதால், உக்ரைன் நிலை குலைந்தது என்றும்,
உலக நாடுகள் இந்த போரை நிறுத்த முன்வரவேண்டும் என்று உக்ரைன் அதிபர் பதறிக்கொண்டு கேட்டுக் கொண்டதும் நடந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் ரஷ்யப்படைகள் உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்று தாக்குதல் நடத்தியதாகவும், உக்ரைன் நாட்டிற்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, உக்ரைன் நாட்டிலிருந்து மாஸ்கோவுக்கு 10 ட்ரோன்கள் ஏவப்பட்ட நிலையில், அவை இடையிலேயே மறிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் ரஷ்யாவின் உள்பகுதி வரை சென்று உக்ரைன் ஏவுகணைகள் தாக்கிய நிலையில், அதற்கு பழிக்கு பழியாக உக்ரைன் நாட்டின் மத்திய பகுதி வரை ரஷ்யப்படைகள் சென்றிருப்பது, இந்த போர் இன்னும் தீவிரமடைகிறது என்பதை காட்டுகிறது.
Edited by Siva
