வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 7 மே 2024 (17:56 IST)

ரஷ்ய அதிபராக மீண்டும் பதவியேற்பு.! 5வது முறையாக பதவியேற்றார் புதின்...!!

Putin
ரஷ்ய அதிபராக 5வது முறையாக புதின் பதவியேற்றுக் கொண்டார். அதிபர் மாளிகையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் புதின் பதவியேற்றுக் கொண்டார்.
 
ரஷ்யாவின் அசைக்க முடியாத அதிபராக புதின் விளங்கி வருகிறார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று 5வது முறையாக புதின் மீண்டும் ரஷ்ய அதிபராகியுள்ளார். அவரது பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.
 
ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான கிரம்ளினில் பிரம்மாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் அதிபர் புதின் ரஷ்ய அரசியலமைப்பின் மீது தனது கைகளை வைத்து குழுமியிருந்த மக்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பதவியேற்பு விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

 
2030ஆம் ஆண்டு அதிபர் புதினின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு உள்ள நிலையில், அதன் பின்னரும் அவர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது. ரஷ்யா முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினை தொடர்ந்து அதிக ஆண்டுகள் அதிபராக பதவி வகித்த நபர் என்ற சிறப்பை புதின் பெற்றுள்ளார்.