1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (11:19 IST)

பிரதமரின் 70 ஆடம்பரக் கார்கள் ஏலம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏற்கனவே தெரிவித்தது போல பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் புரூப் கார் உள்ளிட்ட 70 ஆடம்பர கார்கள் நேற்று ஏலம் விடப்பட்டது.
பாகிஸ்தானில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இம்ரான் கான், நாட்டு மக்களுக்காக செல்விடுவதை விட, நாட்டை ஆள்பவர்களுக்கே அதிகம் செலவழிக்கப்படுகிறது. ஆகவே செலவுகளை கட்டுப்படுத்த நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. அதற்கு பதிலாக இஸ்லாமாபாத்தில் ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன். பிரதமர் இல்லம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும். 
 
பிரதமர் அலுவலகத்தில் உள்ள 33 புல்லட் புரூப் கார்கள் உள்ளிட்ட ஆடம்பர கார்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 102 சொகுசு வாகனங்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். அந்த பணம் மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும் என்று ஏற்கனவே இம்ரான்கான் கூறியிருந்தார்.
அதன்படி நேற்று 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. அது பிரதமர் உபயோகித்த கார்கள் என்பதால் கார் அனைத்தும் அதிக விலைக்கே ஏலம் போனது. மீதமுள்ள கார்களும் வரும் நாட்களில் ஏலம் விடப்படும் என தெரிகிறது.