செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 மார்ச் 2024 (14:33 IST)

இளம்பெண்ணின் காலை கடித்து சுவைத்து சாப்பிட்ட இளைஞர்.. சைக்கோவில் அதிர்ச்சி செயல்..!

ரயில் மோதி விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் துண்டான காலை எடுத்து கடித்து சாப்பிட்ட ஒரு சைக்கோவின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது கால் பகுதி மட்டும் ஒன்று காணாமல் போனது தெரிய வந்த  நிலையில் 27 வயது மதிப்புமிக்க இளைஞர் ஒருவர் கையில் பெண்ணின் கால் பகுதியை வைத்திருந்ததாகவும் அவர் அதை கடித்து சாப்பிட்டு கொண்டு இருந்ததாகவும் தெரிகிறது
 
இது குறித்த வீடியோவை ஒருவர் இணையதளத்தில் பதிவு செய்திருக்கும் போது அந்த இளைஞர் வீடியோ எடுப்பவரிடம் அந்த காலை அசைத்து அசைத்துக் காட்டி ருசித்து கடித்துக் கொண்டிருந்ததை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர்

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞரை தேடி கண்டுபிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் அந்த இளைஞருக்கு 27 வயது என்றும் அவர் இளம் பெண்ணின் காலை எடுத்து கடித்து சாப்பிட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த வீடியோவை எக்ஸ் தளத்திலிருந்து நீக்க அமெரிக்க காவல்துறை கேட்டுக் கொண்டதை எடுத்து அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Edited by Siva