1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated: செவ்வாய், 24 ஜனவரி 2023 (20:21 IST)

ஐக்கிய அமீரகத்திடம் பணம் கேட்ட பாகிஸ்தான் பிரதமர்

Pakistan PM
ஐக்கிய அரபு அமீரக தலைவர்களிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ் பணம் கேட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,. மின்  வி நியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நிலைமையைச் சமாளிக்கும் பொருட்டு,  பல முக்கிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சமீபத்தில், பிரதமர் ஷபாஷ் ஷெரீப் ஐக்கிய அமீரகம் சென்றிருந்தார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில். இரண்டு நாட்களுக்கு முன் நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்தே., அங்குள்ள அரசு தலைவர், அதிகாரிகளைச் சந்தித்தேன். அப்போது, அவர்களிடம் பாகிஸ்தான் நிலைமையைச் சுட்டிக்காட்டி கடன் கேட்க வேண்டாமென நினைத்தேன். ஆனால்,  அவர்களிடம்  கேட்கும் சூழலுக்கு ஆளானேன்.

அதன்படி, பாகிஸ்தானுக்கு இன்னும் 1 பில்லியன் டாலர் பணம் கொடுங்கள் என்று கேட்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.