1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2019 (12:17 IST)

இந்திய விமானத்துக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள் !

150 பயணிகளுடன் பயணித்த இந்திய விமானம் ஒன்றுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் உதவி செய்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் பாலகோட் தாக்குதலுக்கு பிறகு சுமூகமான உறவு இல்லை. இந்நிலையில் இந்திய விமானம் ஒன்றுக்கு பாகிஸ்தான் வான்வெளியைக் கொடுத்து அதிகாரிகள் உதவியுள்ளனர்.

ஜெய்ப்பூரில் இருந்து மஸ்கட் செல்லும் இந்திய விமானம் ஒன்று கடந்த வியாழன் அன்று 150 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தான் வான்வெளி பகுதியில் பறக்கும்போது 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் 34,000 அடிக்கு இறங்கியுள்ளது.  அப்போது  விமானிகள் மேடே எனப்படும் அவசர உதவி செய்தியை அனுப்பினர்.

கிஸ்தான் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் விமானியின் அழைப்புக்குப் பதிலளித்து பயணத்தின் எஞ்சிய பகுதிக்கு அருகில் அடர்த்தியான விமானப் போக்குவரத்து வழியாக அதை இயக்க உதவியுள்ளார்.