திங்கள், 17 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 10 செப்டம்பர் 2025 (16:04 IST)

போராட்டம் என்ற பெயரில் மால்களில் கொள்ளை.. நேபாளத்தில் பெரும் பதட்டம்..!

போராட்டம் என்ற பெயரில் மால்களில் கொள்ளை.. நேபாளத்தில் பெரும் பதட்டம்..!
நேபாளத்தில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திவரும் போராட்டங்கள், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் பதவி விலகியதால் மேலும் தீவிரமடைந்துள்ளன. இந்த அரசியல் பதற்றமான சூழ்நிலையை பயன்படுத்தி, சமூக விரோதிகள் சிலர் தலைநகர் காத்மண்டுவில் உள்ள மால்களில் புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.
 
கொள்ளைக் கும்பல், மால்களுக்குள் அத்துமீறி நுழைந்து டிவி, ஏசி, குளிர்சாதனப் பெட்டி போன்ற விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச்சம்பவங்கள், போராட்டத்தின் நோக்கத்தையே திசைதிருப்பி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளையில் ஒருசில பொதுமக்களும் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
 
இந்த வன்முறை செயல்களைக் கட்டுப்படுத்த, நேபாள ராணுவம் களமிறங்கியுள்ளது. இந்த கொள்ளை சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த போராட்டத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு கொள்ளையடிக்கும் வன்முறை கும்பலை ராணுவம் எச்சரித்துள்ளது.
 
Edited by Siva