1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 15 மே 2018 (11:40 IST)

நவாஸ் ஷெரீப் தேச துரோகியா?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவியை இழந்தவருமான நவாஸ் ஷெரீப் இந்தியாவில் நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது.
 
இந்நிலையில், பாகிஸ்தானில் இன்னும் தீவிரவாத அமைப்பு உயிரோட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த தீவிரவாதிகளை எல்லை தாண்டி அனுப்பி மும்பையில் அப்பாவி மக்கள் 160 பேரை சுட்டுக்கொல்ல எப்படி அனுமதிக்கலாம். இதை விளக்கமுடியுமா. இதுதான் பாகிஸ்தான் கொள்கையா? இதுபோன்ற செயலை ஒருபோதும் பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது என நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். 
 
இந்த கருத்து பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தற்போது, நவாஸ் ஷெரீப்பின் கருத்து தேசத்துக்கு துரோகம் விளைவிப்பதாக உள்ளது என வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.