திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:42 IST)

மலேசியாவின் நில நடுக்கம் ! 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவு!

Malaysia 1
மலேசியாவின்   நில நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் கோலாலம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தூரதிதில் இன்று இரவு சுமார் 8 மணி அளவில் நில நடுக்கம் உண்டானது.  இந்த நில நடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.

திடீரென்று இந்த நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள், அச்சத்தில்  தங்கள் வீடுகளை விட்டு சாலைக்கு வந்து கொண்டனர்.

மக்கள் அனைவரும் வேலை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இரவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில் எந்த அசம்பாவிதமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகிறது.