1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (17:50 IST)

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்: அழிவை ஒப்புக்கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது..!

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்: அழிவை ஒப்புக்கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது..!
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தங்கள் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது லஷ்கர்-இ-தொய்பாவும் இதே உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது.
 
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி மசூத் இல்யாஸ் காஷ்மீரி, ஒரு வீடியோவில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் தலைமையகமான ஜாமியா மஸ்ஜித் சுப்ஹான் அல்லா மீதான தாக்குதலில் அஸாரின் குடும்பம் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
 
இந்த வரிசையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பும் தங்கள் முகாம் பாதிக்கப்பட்டதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.  லஷ்கர் பயங்கரவாத தளபதி காசிம், முரிட்கேயில் உள்ள மார்கஸ் தைபா கட்டிடம் இந்திய தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும், அதை மீண்டும் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் கட்டிடங்களை பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வரும் நிலையில், இந்த ஒப்புதல் முக்கியத்துவம் பெறுகிறது.
 
Edited by Mahendran