நான்கு ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் ஈரான் கப்பல்! – தாக்கியது யார்?

Ship
Prasanth Karthick| Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (11:15 IST)
ஏமன் நாட்டில் செங்கடல் பகுதியில் கடந்த நான்கு ஆண்டாக நிறுத்தப்பட்டிருக்கும் ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏமன் நாட்டின் அருகே செங்கடல் பகுதியில் ஈரானுக்கு சொந்தமான எம்.வி.சாவிஸ் சரக்கு கப்பல் கடந்த நான்கு ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. செங்கடலில் கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையாக இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்தாலும், சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகள் ஈரானின் இந்த கப்பல் உளவு வேலைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கடலில் நின்றிருந்த எம்.வி.சாவிஸ் மீது அநாமதேய தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு பங்கு இருப்பதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் கப்பல் சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.இதில் மேலும் படிக்கவும் :