ஹபீஸ் சயீத் வீட்டருகே குண்டு வெடிப்பு - இந்தியா மீது இம்ரான் குற்றச்சாட்டு

Sugapriya Prakash| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (10:40 IST)
ஜூன் 23ம் தேதி நடந்த குண்டு வெடிப்புக்கு இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.


பாகிஸ்தான் லாகூர் நகரில், ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் வீட்டுக்கு அருகே ஜூன் 23ம் தேதி நடந்த குண்டு வெடிப்புக்கு இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
 
அந்த குண்டு வெடிப்பில் ஒரு போலீஸ்காரர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வுக்கு இந்தியாவை நேரடியாக குற்றம்சாட்டினார் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசூப். அவரது செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பிரதமர் இம்ரான் கானும் இந்த நிகழ்வுக்கு இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :