திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (11:49 IST)

2 வருடங்களுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ.91 பரிசு: இன்ப அதிர்ச்சியில் இளம்பெண்..!

Lottery
ஜெர்மனியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதை தற்போது கண்டுபிடித்து உள்ளதை அடுத்து அவர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். 
 
ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் கலந்த 2022 ஆம் ஆண்டு லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கினார். அதன் பிறகு அவர் லாட்டரி டிக்கெட் முடிவை பார்க்க மறந்துவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்கு வீட்டை சுத்தம் செய்த போது அந்த லாட்டரி சீட்டை அவர் கண்டுபிடித்துள்ளார். 
 
இதனை அடுத்து அந்த லாட்டரி சீட்டிற்கு பரிசு விழுந்துள்ளதா என்று அவர் சோதனை செய்தபோது அவருக்கு 91 லட்சம் பரிசு தொகை கிடைத்துள்ளதை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். 

 
ஜெர்மனியை பொருத்தவரை லாட்டரி சீட்டு விழுந்த நபர்கள் இரண்டு ஆண்டுகள் வரை பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அவகாசம் இருப்பதை அடுத்து அவர் அந்த 91 லட்சத்தை பரிசு தொகையை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  ஒவ்வொரு மாதமும் வரும் சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு திடீரென 91 லட்சம் பரிசு கிடைத்ததை அடுத்து அந்த அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva