ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2023 (15:44 IST)

சந்தா செலுத்தாத கணக்குகளின் ப்ளூடிக் அகற்றப்படும்: கெடு தேதி அறிவித்த எலான் மஸ்க்..!

Elon mUsk
சந்தா செலுத்தாத பயனாளர்களின் ப்ளூடிக் அகற்றப்படும் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்து அதற்கான கெடு தேதியையும் கொடுத்துள்ளார்.
 
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கிய நிலையில் வணிக நோக்கில் பயன்படும் ப்ளூடிக் பெற்ற பயனாளர்களிடமிருந்து சந்தா வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 
 
ஏப்ரல் 20-ம் தேதிக்குள் ப்ளூடிக் பயனாளர்கள் சந்தா செலுத்த வேண்டும் என்றும் இல்லையேல் ப்ளூடிக் நீக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் சந்தா செலுத்தாத ப்ளூடிக் பயனர்கள் தங்கள்  அங்கிகாரம் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என ட்விட்டர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 20ஆம் தேதி அவர் கடைசி கெடு தேதியை எலான் மஸ்க் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran