1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (23:00 IST)

ஹிஜாப் அணிய மறுத்த செஸ் வீராங்கனை நாடு கடத்தல்!

Sara Kadem
ஹிஜாப் அணிய மறுத்த பிரபல செஸ் வீராங்கனை நாடு கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான்  நாட்டில் வசிக்கும் பெண்கள் 7 வயதிற்கு மேல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்,  22 வயது பெண் மாசா அமினி ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார்.

 
அவர் மீது போலீஸார் கடுமையாகத் தாக்கினர். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்ற   நிலையில் கடந்த 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து,  ஈரானில் அரசுக்கு எதிராகப்  பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலில்  ஏற்கனவே  நூற்றுக்கணக்கானோர்  மேல் பலியாகியுள்ளனர். 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில், ஈரான் நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சாரா  காடெம்(25). இவர், சமீபத்தில் கஜகஸ்தான் நாட்டி நடந்த செஸ் போட்டியில் பங்கேற்றார்.

அப்போது, அவர் ஹிஜாப் அணியவில்லை. ஈரான் நடைபெறும் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு தன் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அவர் இப்படி  நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாரா காடெம் நாடு திரும்பினால் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. தற்போது, ஸ்பெயினில் வசிக்கும் அவர்,  நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், இனி அவரால் நாடு திரும்ப முடியாது என்று தகவல் வெளியாகிரது.