தூக்கு தண்டனையை நிறுத்தகக் கோரி பாகிஸ்தானுக்கு பான் கி மூன் வலியுறுத்தல்

Suresh| Last Modified சனி, 27 டிசம்பர் 2014 (15:22 IST)
தூக்கு தண்டனைகளை தடுத்து நிறுத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை, பெஷாவர் ராணுவ பள்ளி மீது தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

தூக்கு தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், தூக்கு தண்டனை வழங்குவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நவாஸ் ஷெரிப்பை தொலைபேசியில் அழைத்தும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :