ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 16 ஜூலை 2017 (15:22 IST)

பட்ஜெட் காரணத்தினால் செவ்வாய்க்கு செல்ல முடியாது - நாசா தகவல்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்ய போதுமான பட்ஜெட் இல்லாததால் தற்போதைக்கு சாத்தியமில்லை என நாசா தெரிவித்துள்ளது.


 

 
சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்த படியக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் நாசா வெகு காலமாக ஆய்வு செய்து வருகிறது. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை எதிர்காலத்தில் குடியேற்ற நாசா திட்டமிட்டுள்ளது.
 
அதன்படி பல சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற சாத்தியமில்லை என ஆய்வு பிரிவின் தலைவர் வில்லியம் ஜெர்ஸ்டன்மையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றம் செய்வது நாசாவின் முக்கிய கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மனிதர்களை செவ்வாயில் குடியேற்றம் செய்ய அதிக செலவு பிடிக்கும். தற்போதைய பட்ஜெட் கொண்டு இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது என்றார்.
 
இதனால் நாசாவின் திட்டமான 2030க்குள் மனிதர்களை செவ்வாயில் குடியேற்றம் செய்வது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளனர்.