செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 5 நவம்பர் 2025 (14:22 IST)

அமெரிக்கா மீதான வரிவிதிப்பு நிறுத்தி வைப்பு.. சீனாவின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?

அமெரிக்கா மீதான வரிவிதிப்பு நிறுத்தி வைப்பு.. சீனாவின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?
கிழக்காசிய நாடான தென் கொரியாவில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர் சந்தித்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பதற்றங்கள் தணிந்து வருகின்றன.
 
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, வர்த்தக போரை குறைக்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 24 சதவீத கூடுதல் வரியை ஓராண்டு காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது. உலகின் இரண்டு பெரிய பொருளாதார சக்திகளுக்கும் இடையிலான உறவில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
 
இதற்கு முன்னர், அமெரிக்காவிலிருந்து அரிய வகைக் கனிமங்கள் ஏற்றுமதிக்கான தடைக்கு ஓராண்டு விலக்கு அளிப்பதாகவும், வேளாண் பொருட்களை அதிக அளவில் கொள்முதல் செய்வதாகவும் சீனா ஒப்புக்கொண்டது. பதிலுக்கு, சீனப் பொருட்கள் மீதான ஒட்டுமொத்த வரியில் 10 சதவீதத்தை அமெரிக்கா குறைத்தது.
 
சீனாவின் இந்த அறிவிப்பு, பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் ஒரு படியாக இருந்தாலும், ஏற்கனவே அமலில் உள்ள 10 சதவீத வரி தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran