கனடாவில் காணாமல் போன பழங்குடியினப் பெண்களின் எண்ணிக்கை உயர்வு


Ashok| Last Modified புதன், 17 பிப்ரவரி 2016 (17:24 IST)
கடந்த 30 ஆண்டுகளில் கனடாவில் காணாமல் போனதாகக் கருதப்படும் பழங்குடியினப் பெண்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பழங்குடியின வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


 

 
கனடாவில் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஏராளமான பழங்குடியினப் பெண்கள் காணாமல் போனதாக அந்நாட்டின் பட இடங்கில் புகார் எழுந்தன. மேலும், காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பழங்குடியின மக்கள் தொடர்ந்து கூறிவந்தனர். இதனால், அந்நாட்டு அரசுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது.
 
இந்நிலையில், காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 1,200 ஆக இருக்கலாம் என்று கூறப்பட்டது, ஆனால் அந்நாட்டு அரசு கணக்கிட்டதில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,400ஆக உயர்ந்துள்ளதாக பழங்குடியின மக்கள் நலத்துறை அமைச்சர் கரோலின் பென்னெட் கூறியுள்ளார்
 
வெள்ளையின மக்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை பழங்குடியின மக்களுக்கு கனடா அரசு அளிக்கத் தவறிவருவதாக பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், காணாமல் போன பெண்களை மீட்டு தரக் கோரியும், அந்நாட்டுக்கு எதிராகவும் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடந்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :