தெற்கு பசுபிக் கடலில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்!
தெற்கு பசிபிக் கடலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்க அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
தெற்கு பசிபிக் கடலில் உள்ள டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கடலுக்கு அடியில் 24 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் புவியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்க அமெரிக்கா சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் நிகழ்ந்ததால் டோங்கோ தீவின் நிலப்பரப்பில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Mahendran