ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் பரபரப்பு

caston| Last Modified சனி, 29 ஆகஸ்ட் 2015 (16:43 IST)
புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர்  மற்றும் கலிஃபோர்னிய மாகான  முன்னாள் கவர்னருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் மாரடைப்பால் காலமானர் என கடந்த  இரண்டு நாட்களுக்கு முன் msmbc.co  என்ற இணையத்தளம் செய்தி ஒன்றை  வெளியிட்டது. பின்னர் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது. ஆனால் அர்னால்டின்  அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும்  ஃபேஸ்புக் பக்கத்தில் தான் இறந்ததாக கூறப்படும் செய்தி பொய்யான செய்தி  என கூறப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து கூறும் போது அந்த இணையதள செய்தியின் படி 911 என்ற  எண்ணுக்கு காலை 9.30 மணிக்கு ஒரு  அவசர அழைப்பு வந்தது அதில்  அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர்  அவரது  படுக்கையறையில் இறந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி ஏன் பரப்பபட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறினார்.

இதே போன்று 2014 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர் விபத்து ஒன்றில் சிக்கி  மரணமடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது  குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :