ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 மே 2018 (09:59 IST)

திருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்

துபாயில் மணமகன் ஒருவர் திருமணமான 15 நிமிடத்தில் மணமகளை விவாகரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயை சேர்ந்த நபர் ஒருவர், திருமணம் செய்ய முடிவு செய்து மணமகளை தேடி வந்தார்.
 
இந்நிலையில் அந்த நபர், ஒரு பெண்ணின் தந்தையிடம் 20,000 பவுண்ட்ஸ் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு அந்த பெண்ணின்  தந்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
 
இதனையடுத்து அனைவரது முன்னிலையிலும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடனேயே பணத்தை தருமாறு மணமகளின் தந்தை கேட்டுள்ளார். ஆனால் மணமகன் 10,000 பவுண்ட்ஸ் மட்டுமே கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த மணப்பெண்ணின் தந்தை அனைவரது முன்னிலையிலும் மணமகனை திட்டியுள்ளார்.
 
இந்த சம்பவத்தால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக கூறி, மணமகன் திருமணமான 15 நிமிடத்திலேயே தலாக் சொல்லி மணமகளை விவாகரத்து செய்துள்ளார்.