1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bala
Last Modified: சனி, 29 நவம்பர் 2025 (19:02 IST)

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....
இலங்கையில் கடந்த 14ம் தேதி முதலே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். கனமழையில் சிக்கி ஏற்கனவே 69 பேர் வரை பலியாகினார். பல பேரையும் காணவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக டிட்வா புயல் காரணமாக இலங்கையில் மீண்டும் கன மழை பெய்து இருக்கிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
அதில் சிக்கி பலரும் உயிரிழந்திருக்கிறார்கள். 20 குழந்தைகள் உட்பட 120 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். குறிப்பாக அனுராதபுரம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு நூற்றுக்கு மேற்பட்ட புத்த பிக்சுச்சிகள் வெளியே வர முடியாமல் தவித்துவருகிறார்கள். அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.
 
டிட்வா புயல் வடக்கு இலங்கையை பகுதியில் மையம் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டிட்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சறிவில் சிக்கி இதுவரை 132 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாக இருக்கிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 6.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 176 பேர் காணாமல் போய் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.